செஸ் மற்றும் சிலம்பம் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் கோவை மாவட்டத்தில் மாணவ,மாணவிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட அளவிலான குறுமைய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன..

பள்ளி கல்வித் துறை சார்பாக நடைபெறும் இதில் மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன இந்நிலையில்,கோவை மாவட்ட புறநகர் குறுமைய விளையாட்டு போட்டிகள் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லாரல் மெட்ரிக் பள்ளியில் துவங்கியது; இதற்கான துவக்க விழாவில் பள்ளியின் தாளாளர் ஃபிராங்க் டேவிட் தலைமை தாங்கினார் இணை தாளாளர் அபிஷேக் பால் ஜாக்சன்,மூத்த விளையாட்டு பயிற்சியாளர் வெள்ளிங்கிரி ஆகியோர் கலந்து கொண்டனர்..

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன், போட்டிகளை துவக்கி வைத்தார் 11,14,17,19 வயதுக்கு உட்பட்ட மாணவ,மாணவிகளுக்கென நடைபெற்ற இதில்,சதுரங்கம் மற்றும் சிலம்பம் ஆகிய போட்டிகள் தனித்தனியே நடைபெற்றன..

கோவை புறநகர் மைய பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர் போட்டிகள் குறித்து லாரல் மெட்ரிக் பள்ளியின் நிர்வாகிகள் ஃபிராங்க் மற்றும் அபிஷேக் ஆகியோர் கூறுகையில்,மாணவ,மாணவிகளின் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக லாரல் பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *