திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் வாரந்தோறும் மன்றத் செயல்பாடுகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் இந்த வாரம் கணித மன்றச் செயல்பாடுகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றிவேலன் தலைமை வகித்தார். சமூக அறிவியல் ஆசிரியர் சூரியகுமார் முன்னிலை வகித்தார், மாணவர்கள் வாழ்வில் கணிதத்தின் பயன்பாடுகள் குறித்து பல்வேறு செயல் விளக்கங்கள் அளித்தனர். ஆறாம் வகுப்பு மாணவர்கள் சூத்திரங்களை பாடல்களாக பாடினார்கள்.
எட்டாம் வகுப்பு மாணவர்கள் வாழ்வில் கணிதத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணிதப் பாட ஆசிரியை விஜயகுமாரி செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஆசியர்கள் ராமமூர்த்தி, இளையராஜா, ரேணுகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.