கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:-
அரியலூரில் நடந்தது அரியலூரில் உள்ள ஏ ஐ டி யு சி அலுவலகத்தில் உடையார்பாளையம் நகர ஏ ஐ டி யு சி ஆட்டோ தொழிலாளர் சங்க மகாசபை கூட்டம் நடந்தது ஏ ஐ டி யு சி மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி கூட்டத்தில் கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு உள்ள நெருக்கடிகள் காவல்துறையினரால் அடிக்கடி ஏற்படும் தொந்தரவுகள் இவைகளை சமாளிக்க ஆட்டோ தொழிலாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று தான் சிறப்புரையாற்றும் போது மகாசபை கூட்டத்தில் பேசினார்
ஏற்கனவே பொறுப்பு வகித்தவர்களே சங்க நிர்வாகிகளாக தொடர்ந்து பொறுப்பில் இருப்பது பொறுப்பிலிருந்து செயல்படுவது என மகாசபையில் தீர்மானிக்கப்பட்டது
அதனை தொடர்ந்து தலைவர் கோமல் நாகராஜ் செயலாளர் முருகேசன் துணைத்தலைவர் ராஜராஜன் துணை செயலாளர் செல்வகுமார் பொருளாளர் செந்தில் குமார் ஆகியோர் ஏகமனதாக புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் விரைவில் மாநில நிர்வாகிகளை அழைத்து மாவட்ட அளவில் விரிவடைந்த பேரவை கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது