இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சீர் மரபு பழங்குடியினர் நல வாரிய அட்டை பெருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஏராளமானோர் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினர்.
இதை போன்று கமுதி தாலுகா அலுவலகத்தில் வழங்கிய நபர்களுக்கு சென்ற மாதமே சீர்மரபினர் நல வாரிய அட்டை வழங்கப்பட்டது. ஆனால் முதுகுளத்தூரில் இன்னும் வழங்காமல் கால தாமதம் செய்யப்படுகிறது.
இது குறித்து முதுகுளத்தூரில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் அவர்கள் தலைமையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சிறப்பு முகாமின் போது நேரடியாக கேட்கப்பட்டது. அப்போது ஆட்சியர் கால தாமதம் குறித்து தாசில்தாரிடம் விசாரித்தார் அதற்கு தாசில்தார் அவர்கள் ஆன்லைனில் தகவல் ஏற்றும் பணி நடைபெறுவதால் கால தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தார்.
இது குறித்து DNT நிர்வாகிகள் கூறும் போது தாலுகா அலுவலகத்தின் மூலம் சீர் மரபினர் நல வாரிய அட்டை விரைவாக வழங்காமல் தாமதித்து வருகின்றனர். சீர் மரபினர் நல வாரிய அட்டை வைத்துக்கொள்வது மத்திய அரசு சலுகைகளைப் பெற உதவும். ஆகையால் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விரைவில் மனுக் கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.