கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அறிவுறுத்தலின் படி வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் ஆலோசனைக்கிணங்க ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை அனைத்து வார்டு பகுதிகளிலும் துரிதமாக நடைபெற்று வருகிறது
இந்நிலையில் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 4 வது வார்டு பகுதியில் கோவை தெற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளரும் 4 வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான ஜே.பி.ஆர்.என்ற ஜே.பாஸ்கர் தலைமையில் வார்டு செயலாளர் தனசேகரன் முன்னிலையில் ஸ்டான்மோர் எஸ்டேட் பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை இல்லந்தோறும் சென்று தீவிரமாக நடைபெற்று வருகிறது
இந்நிகழ்ச்சியில் பிஎல்2 அறிவழகன், பிஎல்சி முருகேசன், ஜெயக்குமார், வேதநாயகம், சௌந்தரராஜன்,சாமிதுரை மகளிர் அணி துணைச்செயலாளர் தனம் மற்றும் பிஎல்சி கவிதா ஆகியோர் இணைந்து உறுப்பினர்களை இணைத்து வருகின்றனர்