செய்தியாளர்: எஸ்.திருபாலா
அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள் ஒழிப்பு மையம் சார்பில், போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் கல்லூரி முதல்வர் நிர்மலா தேவி வரவேற்றார். பேராசிரியர்கள் நாரயணசாமி, முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அந்தியூர் எஸ்ஐ., சந்திரன் தலைமை வகித்தார்.
போதைப் பொருள் பயன்படுத்துவதால், உடலுக்கும், மனதுக்கும் ஏற்படும் தீமைகள் குறித்தும், எதிர்காலத்தை பாதுகாப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில், பேராசிரியர் ராகப்பிரியா, கவுரவ விரிவுரையாளர் கார்த்திக் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.