எக்லீசியா தொண்டு நிறுவனத்தின் சார்பாக பொது மருத்துவ முகாம்
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வத்தக் கவுண்டவலசில் கிறிஸ்துவின் சபை மற்றும் எக்லீசியா தொண்டுநிறுவனம் இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெறுகிறது.
இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலரும், மரத்தடி இலவசப் பயிற்சி மைய இயக்குனரும் ராம மூர்த்தி,பொதுநல மருத்துவர் ஆபேல், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இம்முகாமில் சளி,காய்ச்சல்,சர்க்கரை,தைராய்டுபோன்றவைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு இலவச மருந்துகள் வழங்கப்பட்டது.
மேலும் இம் முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியை கிறிஸ்துவின் சபை ஊழியர்.வெள்ளைச்சாமி அவர்கள் ஒருங்கிணைப்பு செய்து,வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.