கோவைஇந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் அலுவலகத்தில் கோவை இந்து முன்னணி நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது
கோவை மாநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடை சாத்தப்பட்டது .
அதற்குப் பிறகு தனி நபர் தரிசனம் செய்ய வேண்டும் என வருகிறார்.
அவருக்காக மீண்டும் பூட்டிய கோவில் கதவு திறக்கப்பட்டு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்து மத ஆகமங்களின் படி கோவில் பூட்டிய கதவை திறக்க கூடாது .ஆனால் ஆகமத்திற்கு புறம்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்து சமுதாய மக்கள் இந்த சம்பவத்தின் மூலம் கோவில்களில் இது போன்ற ஆகம விதிகளை மீறக் கூடாது என கருத்து தெரிவித்து வருகின்றனர் எனவே ஆகம விதிகளுக்கு எதிராக கோவில் நடையை திறந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் அதில் கூறி இருந்தனர்.
இந்நிகழ்வில் கோவை கோட்ட பொது செயலாளர் பாபா கிருஷ்ணன் மாவட்டத் தலைவர் தசரதன் மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் மாவட்டத் துணைத் தலைவர் சோமசுந்தரம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்