மதுரை மாநகராட்சி கரும்பாலை நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையர் சித்ரா விஜயன் ஆகியோர் தலைமை வகித்தனர் மதுரை வடக்கு எம். எல். ஏ. கோ.தளபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 2025-26-ம் ஆண்டு மாநில நிதி ஆணைய நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளிடம் மேயர், ஆணையர் ஆகியோர் கலந் துரையாடினர் இந்த நிகழ்வில் மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் ரவிச்சந் திரன், உதவி ஆணையர் ரவிக்குமார், உதவி செயற் பொறியாளர் காமராஜ், உதவிப் பொறியாளர் அமர்தீப், மாமன்ற உறுப்பினர் முருகன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.