தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு ஆலோசனையின் படி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மேற்பார்வையில், அதற்கான பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தினசரி குடிநீர் வழங்க வேண்டும். வரும் காலங்களில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பல பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி சண்முகபுரம், தாமோதரன் நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் சரிவர வரவில்லை என்ற புகார் நேற்று முன்தினம் மாநகராட்சி மேயருக்கு கூறப்பட்டது. அன்று இரவு ஆய்வு மேற்கொண்டு அதற்கான பணிகள் வியாழக்கிழமை காலை முதல் நடைபெற்று வந்தது.
இதனை அடுத்து இரவு எட்டு மணி அளவில் மேல சண்முபுரம் பகுதிக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் வருகை தந்தார் காலையில் அங்கு நடந்த பணிகள் தொடர்பாக மீண்டும் விபரங்களை கேட்டு அறிந்தார். அதன் பின்பு அன்று குடிநீர் வராத ஒவ்வொரு வீடாக சென்று இன்று குடிநீர் வருகிறதா என்று கேட்டறிந்து, அங்கு வந்த குடிநீரை மேயர் ஜெகன் குடித்துப் பார்த்தார்.
குடிநீர் எங்களுக்கு இன்று நன்றாக வருகிறது. அதற்கு உங்களுக்கு நன்றி என்று பெண்கள் மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு நன்றி தெரிவித்தனர்.
அதன் பின்பு தாமோதரன் நகர் பகுதிக்கு மேயர் ஜெகன் சென்றார். அங்கும் வீடுகளுக்கு சென்று குடிநீர் சரியாக வருகிறதா என்று பார்த்து குடிநீரை அங்கும் குடித்துப் பார்த்தார்.
அங்கு இருந்த பொதுமக்களிடம் குடிநீர் எப்படி வருகிறது? என்ற விபரங்களை கேட்டறிந்து, சில பகுதிகளில் குடிநீர் சரிவர வரவில்லை என்று பொதுமக்கள் மாநகராட்சி மேயர் ஜெகனிடம் கூறினர்.
அதற்கு உடனடியாக மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் பணிகளை நாளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, இரவு அதிக நேரம் ஆகிவிட்டது என்பதால் அங்கு இருந்த ஒரு பெட்டி கடையில் மாநகராட்சி மேயர் ஜெகன் வாழைப்பழத்தை வாங்கி சாப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து அதன்பின்பும் அன்று இரவு ஒவ்வொரு வீடாக சென்று குடிநீர் தொடர்பாக இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாநகருக்கு குடிநீர் வரும் அளவுகளை அங்கு இருக்கும் பணியாளர்களிடம் மாநகராட்சி மேயர் ஜெகன் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். அப்போது மாநகராட்சி மேயர் ஜெகன் எந்தெந்த பகுதிக்கு எத்தனை மணிக்கு குடிநீர் வழங்க வேண்டும். எத்தனை மணி நேரம் குடிநீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மாநகர மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடு இரவு வரை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
குடிநீர் இணைப்பு வழங்கிய பின்பு உடனடியாக தாமோதரன் நகர், மேல சண்முபுரம் ஆகிய பகுதிகளுக்கு சாலை போடப்படும் என்றும், பொதுமக்களிடம் மாநகராட்சி மேயர் ஜெகன் உறுதி அளித்தார்.
நேற்று இரவு விடிய விடிய மாநகராட்சி மேயர் ஜெகன் ஆய்வு செய்த போது பொதுமக்களிடம் குடிநீர் மட்டுமின்றி சாலை, தெருவிளக்கு போன்ற அனைத்து குறைகளையும் கேட்டறிந்தார்.
திமுக விற்கும் தமிழக அரசுக்கும் மீண்டும் பெருமை சேர்க்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகனின் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் மத்தியில் மேயர் ஜெகனுக்கு ஆதரவு தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் மாநகராட்சி மேயர் ஜெகனின் பணியால் திமுகவின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு விடிய விடிய மாநகராட்சி மேயர் ஜெகன் ஆய்வு செய்த போது பொதுமக்களிடம் குடிநீர் மட்டுமின்றி சாலை, தெருவிளக்கு போன்ற அனைத்து குறைகளையும் கேட்டறிந்தார்.