திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மேல பூண்டி வாழைகட்டைதோப்பு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் கடந்த 20- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7- பத்ரகாளியம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி, நேற்று 27- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை 8- ஆம் ஆண்டு ஆடி திருவிழாவையொட்டி காலை 10- மணிக்கு குடமுருட்டி ஆற்றிலிருந்து அம்பாளுக்கு பால்குடம், காவடி, முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பகல் 12- மணிக்கு ஆலயத்தை வந்தடைந்து,

அம்பாளுக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அறுசுவையுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது.
மாலை 4- மணிக்கு சிறப்பு தப்பாட்டத்துடன் அம்பாள் வீதியுலா காட்சி நடைபெற்றது. மாலை 6- மணிக்கு சிறப்பு அதிரடி வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று 28- ந்தேதி திங்கட்கிழமை காலை 10- மணிக்கு அம்பாள் வீதியுலா காட்சியுடன் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது,
ஆலயம் வந்தடைந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. ஆடி திருவிழாவிற்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நாளை 29- ந்தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7- மணிக்கு விடையாற்றி மற்றும் அம்பாள் வீதியுலா காட்சியும் நடைப்பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை மேலப்பூண்டி கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.