திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா, வடகவுஞ்சி ஊராட்சி, செம்பிரான்குளம் பழியர் இன பழங்குடியினர் கிராமத்தில் வீட்டுமனை இல்லாத 20 குடும்பங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவரது உத்தரவின் பேரில். கொடைக்கானல் கோட்டாட்சியர். திருநாவுக்கரசின் பெரும் முயற்சியால்,செம்பிரன் குளம் ஜி. ஆர். டி. மகாலட்சுமி எஸ்டேட் உரிமையாளர். ராஜேந்திரனின் சொந்த இடத்தில் 20 குடும்பங்களுக்கு வீட்டு மனைகளை இலவசமாக வழங்கினார்.
அதன் அடிப்படையில் பழங்குடியின மக்களுக்கு ஜி.ஆர்.டி.வழங்கும் இடத்தை அளவீடு செய்து மக்களுக்கு வழங்குவதற்கான பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர். திருநாவுக்கரசு, ஜி.ஆர்.டி நிறுவன ஆலோசகர். கருணாநிதி, பண்ணைக்காடு குறு வட்ட அலுவலர்.அழகு ராஜா வடகவுஞ்சி கிராம நிர்வாக அலுவலர்.இராமசாமி, ஜி.ஆர்.டி. எஸ்டேட் சார்பாக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த பெரும் பணிக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்.சரவணன், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர். திருநாவுக்கரசு, ஜி. ஆர். டி. உரிமையாளர். இராஜேந்திரன் ஐயா, கொடைக்கானல் வட்டாட்சியர்.பாபு,மண்டல துணை வட்டாட்சியர். ஜெயராஜ் ஆகியோருக்கும் செம்பிரான்குளம் பளியர் பழங்குடியினர் மக்களின் சார்பாகவும் தீபம் பெண்கள் சுய உதவிக் குழு,ஒளி விளக்கு பெண்கள் சுய உதவிக் குழு,புதுமலர் பெண்கள் சுய உதவி குழு,செம்பிரன் குளம் வன உரிமை கிராம சபை ,செம்பிரான்குளம் வன உரிமை குழு சார்பாகவும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.