மேட்டூர் அணையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து வரும் ஆபத்துகளை எதிர்கொள்ளும் வகையில் முசிறி வட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை வாய்ப்பு குழுவினர் ஆய்வாளர் கலையரசன் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் எந்த நேரமும் மக்களுக்கு பணி செய்யும் வகையில் குணசீலம் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மண்ணை
க. மாரிமுத்து.