துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டியில் உள்ள சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று (ஜூலை-29) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது.முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில் சிங்களாந்தபுரம், முத்தியம்பாளையம், நடுவலூர்,பகளவாடி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பட்டா, ரேசன் கார்டு, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.இதில் வருவாய்த்துறை,மின்சார துறை,காவல் துறை,வட்ட வழங்கல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, மருத்துவ துறை, கூட்டுறவு துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை,குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை உள்ளிட்ட துறையினர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
முகாமில் வட்டாட்சியர் மோகன்,சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் சத்ய நாராயணன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஐயப்பன், ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் ரமேஷ், மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், கல்லூரி முதல்வர் பூபாலன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோகிலா, வருவாய் ஆய்வாளர்கள் இளவரசி,சுரேந்தர்,கிராம நிர்வாக அலுவலர்கள் வசந்த மலர்,சின்னத்தம்பி,ஊராட்சி செயலர்கள் சாமிவேலு, சந்திரசேகர், மனோகரன் மற்றும் இளைஞர் அணி ஸ்டுடியோ சசிகுமார் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்