கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:
அரியலூரில் கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் அரியலூர் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் அரியலூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது
சங்கத்தின் மாவட்ட தலைவர் பைரவன் தலைமை தாங்கினார் மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார் மாவட்ட செயலாளர் ஏ எஸ் ஆர் அம்பேத்கார் கோரிக்கை விளக்க உரையாற்றினார்
அரசு அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் வேல்முருகன் துவக்க உரையாற்றினார் உதயசூரியன் ஆசைத்தம்பி இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சத்துணவு சங்க மாவட்ட செயலாளர் காந்தி செவிலியர் மேம்பாட்டு சங்கம் ராகவன் ஓய்வூதிய சங்கம் காமராஜ் மகாலிங்கம் சுப்பிரமணியம் ஆகியோர் பேசினார்கள் அரசு அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஷேக்தாவூத் நிறைவு உரையாற்றினார் அதில் அவர் போராட்டத்தின் நோக்கம் தமிழக அரசு செய்ய வேண்டியவை ஆகியவை குறித்து பேசினார்
மாவட்ட செயலாளர் மூர்த்தி அனைவருக்கும் நன்றி கூறினார் சாலை பணியாளர்களின் 49 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பனிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் தமிழக அரசே மேல்முறையீடு செய்யாதே உயர்நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும் மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும் தனியார் மயப்படுத்துதலை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது