கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பழைய வால்பாறை பகுதியில் உள்ள செல்லாளிப்பாறை கிழக்கு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சுமார் 41 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்

இந்நிலையில் இப்பள்ளியின் மேற் கூரை குரங்குகளின் அட்டகாசத்தால் சிதிலமடைந்து உள்ள நிலையில் மிகவும் பழுதான சுவர்களில் இருந்து மழைநீர் கசிவதால் வகுப்பறைகளில் மாணவர்கள் பெரும் சிரமத்தோடு அமர்ந்து கல்வி பயிலும் அவல நிலை தொடர்ந்து வருவதாகவும் அதை சீரமைக்க மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நகராட்சியின் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார் மற்றும் அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் கவிதா ஆகியோர் இன்று அப்பள்ளியை நேரில் ஆய்வு செய்தனர்

அதன் பின்பு பள்ளியின் தலைமையாசிரியர் மணிவிளக்கிடம் விவரம் கேட்டறிந்த நகர் மன்ற தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு நல்லமுறையில் வழங்கப்படுகிறதா ஏதேனும் குறைகள் உள்ளதா என்று மாணவர்களிடம் கேட்டறிந்து உணவை அனைவரும் உட்கொண்டு சம்பந்தப்பட்ட சத்துணவு அமைப்பாளரிடம் தொடர்ந்து இதே போல நல்லமுறையில் சமைத்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் இந்த ஆய்வின் போது முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் செல்வம், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மகேந்திரன், பள்ளி ஆசிரியர்கள், சமையலர்கள் உள்ளிட்ட அனைவரும் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *