C K RAJAN
Cuddalore District Reporter
9488471235
கடலூர் மாவட்ட ஊரக குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ஊரக குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை புவனகிரி வட்டத்திற்குட்பட்ட வத்தராயன்தெத்து கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று துவக்கி வைத்து. மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமை உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு மீன் விரலிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவிக்கையில்,
2025-2026ஆம் ஆண்டு மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள ஊராட்சி குளங்களில் மீன் உற்பத்தியினை அதிகரித்திட மீன்குஞ்சு இருப்பு செய்யும் திட்டத்தின் படி கடலூர் மாவட்டத்திலிலுள்ள ஊராட்சி குளங்களில் 250 ஹெக்டர் நீர் பரப்பில் 5 இலட்சம் மீன்விரலிகள் இருப்பு செய்யப்படவுள்ளது.
அதனடிப்படையில் இன்றைய தினம் புவனகிரி வட்டத்திற்குட்பட்ட வத்தவராயன் தெத்து கிராமத்தில் உள்ள சின்னகுளம், பெரியகுளம் மற்றும் காலனி குளங்களில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்து இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. ஊராட்சி குளங்களில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்வதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சுமார் 265 டன்கள் வரை உள்நாட்டு மீன்உற்பத்தி அதிகரித்திடும். இதன் மூலம் கிராமப்புறங்களில் புரதசத்து மிகுந்த மீன்கள் மக்களுக்கு கிடைக்கபெறுதோடு கூடுதல் வருமானமும் கிடைக்கப்பெறும்.
கடலூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் உறுப்பினர்களுக்கு ஹெக்டர் ஒன்றிற்கு ரூ.5000 மதிப்பிலான 10.000 எண்ணம் மீன்குஞ்சுகள் உள்ளீட்டு மானியமாக வழங்குதல் திட்டத்தில் 250 ஹெக்டருக்கு மீன்விரலிகள் வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில் இன்று வத்தவராயன்தெத்து கிராமத்தை சார்ந்த மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் உறுப்பினர்களுக்கு உள்ளீட்டு மானியமாக மீன்குஞ்சுகள் வழங்குதல் திட்டத்தில் முதற்கட்டமாக 15,35 ஹெக்டர் அளவில் மீன்குஞ்சுகள் வழங்கி துவக்கி வைக்கப்பட்டது. மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் உறுப்பினர்களுக்கு உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டருக்கு 10,000 எண்ணம் மீன்குஞ்சுகள் வழங்குவதன் மூலம் நடைமுறை செலவினம் குறைவதோடு மீன்வளர்ப்போருக்கு வருமானம் அதிகரிக்க வழிவகை செய்யும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கடலூர் மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் வேல்முருகன், உதவி இயக்குநர், பரங்கிப்பேட்டை ரம்யா,மாவட்ட மீன்வளர்போர் மேம்பாட்டு முகமையின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.