புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவல் பிரதிநிதிகளாக மாநிலத் தலைவர் ராமலிங்கம் அவர்களால் நியமிக்கப்பட்ட மாநில செயலாளர் தமிழ்மாறன் மற்றும் மாநில ஊடகத்துறை துணை தலைவர் ரௌத்திரம் சக்திவேல் ஆகியோர் புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியாளர் குலோத்துங்கன் அவர்களை சந்தித்து நியமன கடிதத்தை அளித்தனர்.
மேலும் வரும் காலங்களில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டங்கள், மக்கள் பிரதிநிதிகள் கூட்டங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான விவகாரங்கள் அனைத்தையும் இவர்கள் மேற்கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.