விருத்தாசலம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் தாம்பரம் வழக்கறிஞர் ரகுராமன் என்பவரை சமூக விரோதிகள் தாக்கியதை கண்டித்தும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோறியும் விருத்தாசலம் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு பார் அசோசியேஷன் தலைவர் சாவித்திரி செந்தில் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கர் கணேஷ் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.