முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை சி.ஐ.டி காலனியில் உள்ள திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப்படத்திற்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.