தாராபுரம் பகுதியில்முத்தமிழறிஞர் கலைஞரின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று 200-க்கும் மேற்பட்ட திமுகவினர் அமைதி ஊர்வலம் – கலைஞரின் திருவுருவப்படத்திற்கு நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்
முத்தமிழறிஞர் கலைஞரின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று அனுசரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர திமுக திமுக சார்பில் வட தாரை பகுதியிலிருந்து திமுகவினர் கருப்பு நிற சட்டை அணிந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அண்ணா சிலையை வந்தடைந்தனர்.
தாராபுரம் அண்ணா சிலைக்கி அலங்கரித்து வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் தலைமையில் சிறு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் 200-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.