புதுச்சேரி காரைக்கால் மாவட்டம் நிரவி கொம்யூன் முதல் சாலை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் நிறுவனமான அல் சாய்க்கா உணவகத்தில் நடைபெற்றது.
அச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ். ஆனந்த்குமார் தலைமை தாங்கினார்.
பல்வேறு பிரச்சினைகள் ஆய்வு செய்யப்பட்டு, கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.
பாரத பிரதமர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தார். புதுச்சேரி யூனியன் பிரதேசம், இந்திய ஒன்றிய அரசின் தத்துப்பிள்ளையாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் ஆட்சி பணி அதிகாரிகள், செயலாளர்களாக பல்வேறு துறைகளை நிர்வகித்து வருகின்றனர்.
பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி வாரியத்தின் தலைவர், புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளர் ஆவார். அவருக்கு முழு ஓய்வூதியம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் மற்றும் இந்திய ஆட்சி பணி அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பஜன்கோவா வேளாண் கல்லூரிக்கு, இந்திய பிரதமர் அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை இன்று வரை நடைமுறைப்படுத்தாதது வருத்தத்திற்குரியது.
பஜன்கோவா ஊழியர்கள் இந்தியர்கள் அல்லவா? பாரத பிரதமர் அவர்கள் அறிவித்த அரசு ஊழியர்கள் அவர்கள் அல்லவா? பஜன்கோவா ஊழியர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், பாரத பிரதமர் அறிவித்த நல்லத் திட்டத்தால் பயனடைந்து, திரு. மோடி அவர்களை மதித்து விசுவாசிக்க வேண்டாமா?
மத்திய அரசின் பல திட்டங்களை பஜன்கோவா செயல்படுத்தியிருந்தும், அதன் ஊழியர்களுக்கு மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை வழங்காதது ஏன்? நாட்டின் முதுகெலும்பான விவசாயம் சார்ந்த கல்லூரிக்கு அரசு தனி முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது உண்மை என்றால், பிரதமர் திரு. மோடி அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை விவசாயக் கல்லூரிக்கு மறுத்து, ஊழியர்களை தீண்டத்தகாதவர்களாக ஒதுக்குவது ஏன்?
இதுகுறித்து அரசு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
வெறும் வாய்மொழியாக இல்லாமல், மத்திய அரசின் திட்டங்களை நேர்மையாகவும் உண்மையாகவும், ஊழியர்கள் பயனடையும் வகையில் நிதி ஒதுக்க வேண்டும்.
மத்திய அரசின் முகவரான மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் பஜன்கோவா மீது கூடுதல் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கி நல்லாட்சி உறுதி செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவரை நேரில் சந்தித்து, இது குறித்து வலியுறுத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், கல்லூரியின் மாணவ–மாணவியர் விடுதியில் உணவகம் நடத்தும் தனியார் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். முறைகேடான ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோர், மாணவ–மாணவியர் மற்றும் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் நலன் கருதி, நிதி மோசடியைத் தடுக்க மத்திய புலனாய்வு துறை மற்றும் அமலாக்கத் துறையிடம் புகார் பதிவு செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
மாணவ–மாணவியர் செலுத்தும் கட்டணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு, விடுதிகளில் பல ஆண்டுகளாக அயராது பணியாற்றி வரும் பணியாளர்களை தற்காலிக தினக்கூலி ஊழியர்களாக இணைத்து, அரசு நிதியில் ஊதியம் வழங்கினால் பெற்றோரின் நிதி சுமை குறையும். பொதுநலன் கருதி, அரசு ஆவன செய்ய வேண்டும்.
கல்லூரி நிர்வாகம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முழுமையாக மதிக்காமல், ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களை அலைக்கழிப்பதால், மத்திய தகவல் ஆணையத்திடம் புகார் அளித்து, பொது தகவல் அதிகாரி மீது துறையின் ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தகவல் மறைப்பது ஊழலை உறுதி செய்கிறது என்பதால், கல்லூரி நிர்வாகம் நேர்மையாக செயல்பட, துணைநிலை ஆளுநர் அவர்கள் உரிய உத்தரவுகளை தலைமைச் செயலாளர் அவர்களுக்கு பிறப்பிக்க, அவரை நேரில் சந்தித்து வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டது.
முன்னதாக, சங்கத்தின் செயலாளர் டாக்டர் கே. எஸ். குமாரவேல் அனைவரையும் வரவேற்றார் கூட்டத்தின் இறுதியில், கலந்து கொண்ட அனைவருக்கும் பொருளாளர் திரு. பசுபதி நன்றி தெரிவித்தார்.