புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில அமைப்பு செயல்பாட்டு பயிற்சி முகாம் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் ராமலிங்கம் (Ex- Mla) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் , தமிழ்நாடு மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் , தமிழ்நாடு மாநில இளைஞரணி தலைவர் சூர்யா ஆகியோர் கலந்துகொண்டு புதியதாக பொறுப்பேற்று இருக்கும் நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கினர்.
மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா , உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் , பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, அமைச்சர் .ஜான்குமார், முன்னாள் அமைச்சர் சாய்சரவணகுமார் , சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் ஜான்குமார், தீப்பாய்ந்தான்,செல்வம்,Gns.ராஜசேகர், அசோக் பாபு ( Ex- Mla) மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் லட்சுமி நாராயணன், மாநில பொருளாளர் ராஜகணபதி ஆகியோர் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சந்தோஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேலும் பயிற்சி முகாமில் மாநிலத் துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள், மாநில அணி தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், தொகுதி தலைவர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சி தயாராக இருக்க வேண்டும் மேலும் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துங்கள் என தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் அறிவுறுத்தினார்