திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 6- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வினை பள்ளியின் தலைமை ஆசிரியை பிரேமா, வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர்கள் குமரேசன் மற்றும் சுகந்தி ஆகியோர் துவங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் முதல் நிகழ்வாக மாணவிகளுக்கு எதிர்பாராத நேரங்களில் தனக்கு வரும் ஆபத்துக்களை தம்மிடம் உள்ள பொருட்களைக் கொண்டு எவ்வாறு தடுப்பது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் தற்காப்பு கலை பயிற்றுனர் திரு ராஜமணிகண்டன் தற்காப்பு கலை குறித்த நோக்கங்களை மாணவிகளுக்கு கூறினார். இந்நிகழ்வில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு விஜயபாலன், ஆசிரியர் பயிற்றுநர் எழிலரசி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.