தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் ருத்ராவதி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
அதனை தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.முகாமில் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 109 மனுக்கள்,மகளிர் உதவித்தொகை வேண்டி 204 மனுக்கள்,கூட்டுறவு உணவு மற்றும் பாதுகாப்பு துறைக்கு 35,ஆதார் மற்றும் இசேவைக்கு 27 மனுக்கள் உட்பட பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 406 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் ருத்ராவதி பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள்,துணைத் தலைவர் சின்னமணி் என்கிற மோகன்ராஜ்,குண்டடம் மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சந்திரசேகர், ருத்ராவதி பேரூர் தி.மு.க செயலாளர் அன்பரசு, துணைச்செயலாளர் பிரபாகரன். மாவட்ட பிரதிநிதி நந்தகோபால். மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராமசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.