திண்டுக்கல் மாவட்டத்தில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, குழந்தைகள், மாணவ, மாணவிகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர்.சரவணன் திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாநகராட்சி மேயர்.இளமதி ஜோதிபிரகாஷ் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், “தேசிய குடற்புழு நீக்க தினம்“ உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதி மொழியேற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், தாய்சேய் நல அலுவலர் திருமதி உமாமகேஸ்வரி, நகர்நல அலுவலர் மரு.ராம்குமார், பள்ளி சிறார் மருத்துவ அலுவலர் மரு.ஜெசிந்தா, மரு.தாசில் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.