திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மயான பூமியில் மனைவி மகனுடன் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வருகிறார்.
வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் சட்டப்படிப்பு பயிலும் கீர்த்தனா விஜயகுமார் இது குறித்து பேசுகையில்,இறுதிச் சடங்கில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுவது வழக்கமாக உள்ளது,பெண்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்பது தொடர்பான கருத்துகள் மாறுபடுகின்றன. சிலர் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், சிலர் ஏற்றுக்கொள்கிறார்கள்சிலர் பெண்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்பது மரபுக்கு எதிரானது என்கின்றனர்.
சில பெண்கள் தங்கள் பெற்றோருக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ இறுதிச் சடங்குகளை செய்வதில் பெருமிதம் கொள்கிறார்கள். நாங்கள் உற்றார், உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்களால் கைவிடப்பட்டு இறந்த உரிமை கோரப்படாத
ஆதரவற்ற அனாதை பிரேதங்களுக்கு உரிய மரியாதை உடன் நல்லடக்கம் செய்து வருகிறோம் என்றார்.