தென்காசி

தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சிக்கு உட்பட்ட திருமலாபுரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியை தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான் ஒலி துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சிக்கு தேன் பொத்தை ஊராட்சி ஒன்றிய தலைவர் பார்வதி கனி மற்றும் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலர்கள் மாரியப்பன் மாணிக்கவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் தேன்பொத்தை
கிளர்க் சக்திவேல் வரவேற்றார் .இந்நிகழ்ச்சியில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

தேன் பொத்தை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பயனாளர்கள் இந்த முகாமில் நேரடியாக வந்து தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி பயன் அடைவது குறித்து இந்த பகுதியில் உள்ள பார்வதி கூறும்போது தாங்கள் எங்களுக்கு வேண்டிய மனுக்களை சுமார் 10 கிலோமீட்டர் கடந்து சென்று மனுக்களை பரிசீலிக்க பல நாட்கள் அலைந்த நிலையில் இந்த உங்களுடன் ஸ்டாலின் முகமானது எங்களின் வீட்டின் அருகே வந்து கிடைப்பது

மிகுந்த மகிழ்ச்சியாகவும் அதே நேரம் மனுக்கள் உடனுக்குடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படுவது எங்களின் நேரங்களை மிச்சப்படுத்துவதாகவும் மிகுந்த பயனுள்ளதாகவும் தமிழக முதல் அமைச்சருக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்

இந்நிகழ்ச்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை கொடுத்து உடனுக்குடன் தீர்வு கண்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியை பொதுமக்களே ஏற்படுத்தி உள்ளது இந்நிகழ்வில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒரே இடத்தில் இருந்து தீர்வு காண்பது இந்த அரசுக்கு கிடைத்த வெற்றியாக பொதுமக்கள் கருதுகின்றனர்

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் கலாநிதி கிளைச் செயலாளர் முருகன் ரமேஷ் திவான் ஒலி முருகேசன் காமாட்சி நாதன் ஈஷா முஹம்மது மற்றும் சேவு கண்ணு ஒன்றிய சிறுபான்மை அணி அமைப்பாளர் முகமது கபீர் புதூர் மாரி ராஜ் மீனாட்சிபுரம் துரை மற்றும் அரசு அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள்ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *