அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐயுசி மாவட்ட பொதுச் செயலாளர் டி தண்டபாணி சிஐடியு மாவட்ட செயலாளர் பி துரைசாமி தொமுசா சின்னையன் ஐ என் டி யு சி மாவட்ட பொதுச் செயலாளர் சௌந்தரராஜன் எச் எம் எஸ் மாவட்ட செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் சி ஐ டி யு மூத்த தோழர் சிற்றம்பலம் எல் ஐ சி கிருஷ்ணன் அரியலூர் தொமுசா அரசு போக்குவரத்து கழக செயலாளர் டிவி அன்பழகன் ஐ என் டி யு சி மாவட்ட தலைவர் விஜயகுமார் நகர காங்கிரஸ் தலைவர் மா மு சிவகுமார் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய துணை செயலாளர் து பாண்டியன் சகுந்தலா மலர்கொடி உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
கோரிக்கைகள் டிரம்பின் மிரட்டல்களை நிராகரித்து அனைத்து நாடுகளிலும் வர்த்தகம் செய்வது இந்திய இறையாண்மையை நிலை நிறுத்த வேண்டும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் மத்திய அரசு அனைத்து ஒப்பந்தங்களும் பாராளுமன்றத்திலும் பொதுமக்கள் ஆலோசனைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் ரகசிய வர்த்தக ஒப்பந்தம் மத்திய அரசு செய்யக் கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது