உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் “Celebrating Gift of Life: Honouring Our Live Liver Donors” என்ற தலைப்பில் பாராட்டு விழா ஆகஸ்ட் 13, 2025 அன்று நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 அன்று அனுசரிக்கப்படும் “உலக உறுப்பு தான தினம்” மனித உயிர்களை காப்பாற்றும் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன், தன்னார்வ உடல் உறுப்பு தான பதிவு செய்யும் எண்ணத்தை ஊக்குவிக்கிறது மற்றும் உலகம் முழுவதும் தன்னலமின்றி உறுப்பு தானம் செய்தவர்களை கௌரவிக்கிறது.

இந்நிகழ்வில், மூளை சாவு அடைந்து அவர்களது உறுப்புகளை தானமாக வழங்குவது குறைவாக இருப்பதால், கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளிகள் பெரும்பாலும் “உயிருடன் கல்லீரல் தானம்” செய்வதற்கே சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்பதைக் குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கல்லீரல் செயலிழப்பு காரணமாக இறுதி கட்டம் ஆபத்தில் இருந்த நோயாளிகளை காப்பாற்ற, அவர்களின் நெருங்கிய உறவினர்கள் தங்கள் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கிய தைரியத்தை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை பாராட்டி கௌரவித்தது.

திரு. ஆர். சுந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். மருத்துவர் வி. பிரேம் சந்தர், மூத்த ஆலோசகர் – கல்லீரல் மாற்று மயக்க மருந்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் , வரவேற்புரையை வழங்கினார். இணை நிர்வாக அறங்காவலர் திரு. ஆர். நரேந்திரன் அவர்களின் பங்கேற்பு விழாவுக்கு சிறப்பூட்டியது.

அலைய்டு ஹெல்த் சயின்ஸ் (AHS) மாணவர்கள் உறுப்பு தானத்தின் செய்தியை மக்களின் மனதில் பதிய வைக்கும் விதமாக வண்ணமயமான ஃப்ளாஷ் மாப் நிகழ்ச்சி நடத்தியது. விழாவில் கல்லீரல் மாற்று சிகிச்சை பெற்ற நோயாளிகளும் குடும்பங்களும் தங்கள் உணர்ச்சி பூர்வமான அனுபவங்களை பகிர்ந்து நன்றி தெரிவித்த காணொளியும் வெளியிடப்பட்டது. உயிருடன் கல்லீரல் தானம் செய்தவர்கள் அனைவரும் மருத்துவமனை சார்பில் பாராட்டுப் பெற்றனர்.

விழா நிறைவில் மருத்துவர் ஆர். ஜெயபால், ஆலோசகர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், நன்றி உரையாற்றினார். அவர் தானதாரர்களின் உயரிய பங்களிப்பையும், மருத்துவ அணியின் தன்னலமற்ற சேவையையும், சமூகத்தின் உறுதியான பங்களிப்பையும் பாராட்டினார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மருத்துவர் ஆனந்த் பரதன், மருத்துவர் பி. கேசவன், மருத்துவர் ஆர். ஜெயபால், மருத்துவர் வி. பிரேம் சந்தர் ஆகியோரின் அயராது உழைக்கும் பணி மற்றும் உயிர்களை காப்பாற்றிய சிறப்பான சேவைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மருத்துவமனையின் தலைமை நிர்வாகம் மற்றும் மருத்துவமனை குழுவின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் தலைமை செயல் அதிகாரி, தலைமை நிர்வாக அதிகாரி, மருத்துவ இயக்குநர், மருத்துவ கண்காணிப்பாளர் , மூத்த ஆலோசகர்கள், செவிலியர் பிரிவு தலைவர்கள், செவிலியர் குழுவினர் மற்றும் மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

அவர்களின் பங்கேற்பு, உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதிலும், அதற்காக தன்னலமின்றி செயல்பட்ட நாயகர்களை கௌரவிப்பதிலும், மருத்துவமனை நிறுவனம் கொண்டுள்ள ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியது.

உறுப்பு தான விழிப்புணர்வில் முன்னணி வகிக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், உரைகள் மூலம் மக்களிடையே உறுப்பு தானத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, மனித உயிர்களை காப்பாற்றும் பணியில் முன்னோடியாக திகழ்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *