துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் கொப்பம்பட்டி, நாக நல்லூர் ஆகிய ஊராட்சிகளுக்கு கொப்பம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 13 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது.
முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் வழங்கி விரைவில் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இதில் நாக நல்லூர், கொப்பம்பட்டி, கொப்பமாபுரி,முத்தையம் பாளையம், ராஜபாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டா, ரேசன் கார்டு, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
இதில் வருவாய்த்துறை, மின்சார துறை,காவல் துறை,வட்ட வழங்கல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, மருத்துவ துறை, கூட்டுறவு துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை,குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை உள்ளிட்ட 15 துறையினர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
இதில் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டகத்தை எம்எல்ஏ வழங்கினார்.முகாமில் ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வன்,ந. அசோகன்,வட்டாட்சியர் சிவகுமார்,சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் பழனிவேல், தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் ஐயப்பன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார்,பழனிசாமி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் வடக்கு மாவட்ட துணை செயலாளர் சோபனபுரம் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்மாறன், பேரூர் கழக செயலாளர்கள் வெள்ளையன், நடராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெகநாதன், கொப்பம்பட்டி முன்னாள் தலைவர் மனோகரன், இன்ஸ்பெக்டர் முத்தையன், எஸ் ஐ கருப்பண்ணன்,வட்ட வழங்கல் அலுவலர் முத்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகர், குமார், மேலாளர் செந்தில்குமார், சத்துணவு மேலாளர் சுப்பையா,வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், ஊராட்சி செயலர்கள் ஜெயராமன், அசோகன், சின்னத்துரை , ராமசந்திரன், பெருமாள் ,பிரகாஷ்,சீரங்கன், மதன் மற்றும் கிளைச் செயலாளர் பெருமாள், ராஜேந்திரன், சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்