79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அன்வெஷனா பள்ளி மாணவ மாணவிகள் தனிபட்ட மற்றும் குழு சாதனைகளை நிகழ்த்தி சர்வதேச யுனைடெட் கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.
முன்னதாக பள்ளியில் பயிலும் 79 குழந்தைகள் மற்றும் அசிரியைகள் இணைந்து இந்திய வரைபட வடிவில் நின்று குழுவாக சாதனை புரிந்தனர்.
இதே போல, மேலும் 3 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் சுதன்சு முத்ரன்,ஷெல்லே சரத்குமார்,ஹர்சித், ஆத்விக்,வித்ருதன்,ஏஸ்ரியேல் லெவி பால்,விருஷ்சிகா,நேகா ஸ்ரீ,தரண் மற்றும் ஹாவிஷ் ஆகியோர் தனிபட்ட முறையில் சாதனை புரிந்தனர்.
இதே போல ஸ்ரீ கிட்ஸ் பள்ளி மாணவர்களுடன் இணைந்து, விஷ்வாஞ்சனி,திரிதேவ் அர்ஜூன், ஜேக்கிந்தா எலிஷா ஜான்,ஏஸ்ரியேல் லெவி பால்,புகழினியன்,பவன் குமார் மற்றும் சாய்கிரிஷ்விகா ஆகியோர் 79 வடிவில் நின்று யோகாசனம் செய்து சாதனை புரிந்தனர்…
இதே போல நோ ஆயில் நோ பாயில் எனும் கருத்துடன், ஆசிரியைகள் அமலா,பூந்தளிர்,பவித்ரா,வித்யா,சுகன்யா,சுதா மற்றும் குருரான காயத்ரி ஆகியோர் இணைந்து 79 வகையான இயற்கை உணவுகளை சமைத்து சாதனை புரிந்தனர்.
இந்நிலையில் சாதனையாளர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா அன்வேஷனா பள்ளியின் தாளாளர் ராமதாஸ் மற்றும் முதல்வர் பிரவீணா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது..
இதில் சிறப்பு விருந்தினராக யுனைடெட் கலாம் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் . செந்தூர் பாண்டியனுடன் இணைந்து துனைத் தலைவர்கள் விக்னேஷ்வரி, அபிஷா ராஜீ மற்றும் குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டு சாதனை மாணவர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு உலக சாதனை அங்கீகார சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர்…