திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிழக்கு ஒன்றியம் தென்குவளவேலி ஊராட்சிக்கு உட்பட்ட குருவாடி கிராமத்தைச் சேர்ந்த அதிமுகவினர் தென்குவளவேலி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்தான கிருஷ்ணன் முன்னிலையில் வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி தலைமையில் திமுகவில் இணைந்தனர். உடன் சித்தனவாழூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்.கரிகாலன் இருந்தார்.