கிராமசபை கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்-பொதுமக்கள் மனு
குண்ட்டம் பகுதியில் உள்ள. அனைத்துஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. நந்தவனம்பாளையம் ஊராட் சிக்கு உட்பட்ட காணிக்கம் பட்டி அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நாகலிங்கம் தலைமை தாங்கி னார்.
கூட்டம் தொடங்கிய தும், வரவு செலவு விபரங் களை செயலாளர் படித்தார். பின்னர் கூட்டத்தை முடிக்க முற்பட்டனர். அப்போது பொதுமக்கள், போதிய கோரம் இன்றி கூட்டம் நடத் தியதால் கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மனு அளித்தனர்.
மேலும் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஓடைக ளிலும், ஊராட்சி ரோடுகளி லும் மண்ணை அள்ளிக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினர். இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளின் அலுவ லர்கள், தூய்மை பணியாளர் கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.