எஃப்எம்ஜி மெட்கான் 2025 எனும் தலைப்பில் வெளிநாட்டில் படித்து இந்தியாவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கு கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் கலையரங்கத்தில் நடைபெற்றது. கருத்தரங்கு ஒருங்கிணைப்பு செயலாளர் டாக்டர் ஜெகதீஷ் குமார் அனைவரையும் வரவேற்றார்.

கருத்தரங்கு ஒருங்கிணைப்பு தலைவர் டாக்டர் பரமேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர்களாக இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளையின் மாநில செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு, பி. எஸ்.ஜி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜே.எஸ் புவனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மூத்த மருத்துவர் தங்கமுத்து மருத்துவர்களுக்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அறிவியல் தொழில்நுட்பங்கள் சார்ந்த கருத்தரங்கு 12 அமர்வுகளாக நடைபெற்றது. இதில் பல்வேறு மருத்துவத் துறைகளில் வளர்ந்துள்ள தொழில் நுட்பங்கள் குறித்து மருத்துவர்கள் எடுத்துரைத்தனர்.

கருத்தரங்கில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கு ஒருங்கிணைப்பு தலைவர் டாக்டர் பரமேஸ்வரன் கூறுகையில், வெளிநாட்டில் படித்து இந்தியாவில் பணியாற்றுவது மருத்துவர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறோம். ஆறாவது பதிப்பாக நடைபெறும் இந்த கருத்தரங்கு கோவையில் 2வது முறையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது என்றார்.

இறுதியில் கருத்தரங்கு ஒருங்கிணைப்பு பொருளாளர் டாக்டர் விஜயகுமார் கிருஷ்ணன் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்.எம்.ஜி.ஏ. தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் முத்தையா, பொதுச் செயலாளர் டாக்டர் கிருஷ்ண கிஷோர், பொருளாளர் பிரேம்சந்த் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *