திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் புனித சலேத் அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு கொடைக்கானல் சுற்றுலா வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சங்கம் சார்பாக நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியினை நகர் கழக செயலாளர்.முகமது இப்ராகிம்,நகர்மன்ற மன்ற தலைவர்.செல்லதுரை, நகரமன்ற துணை தலைவர்.மாயக்கண்ணன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் நகர் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அன்னதான நிகழ்ச்சி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.