தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சிவசேனா கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் இணைப்பு விழா வீர சைவ மடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிவசேனா கட்சியின் மாநில தலைவர் எஸ்.எம்.மணிபாரதி தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை.எஸ்.ஆனந்த் முன்னிலை வகித்தார் .
சிறப்பு அழைப்பாளராக அகில பாரத மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாபு பரமேஸ்வரன், இந்து மக்கள் கட்சியின் மாநிலச் பொதுச் செயலாளர் குருமூர்த்தி, பாஜக தஞ்சை வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் சதீஷ்குமார், தஞ்சை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் வேதா செல்வம்,பார்வேர்ட் பிளாக் கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் மாதவன், ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்
சிவசேனா கட்சி சார்பாக10 -க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன
இவ்விழாவில் ,இந்து புரட்சி முன்னணி மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ஜோதி குமரன், சிவசேனா கட்சியின் தஞ்சை (வ)மாவட்ட செயலாளர் கபிலன் ,குடந்தை நகர தலைவர் கல்யான குமார்,குடந்தை நகர மேம்பாட்டு அணி செயலாளர் விக்ரம் மாநகர ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும்
100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
முன்னதாக தஞ்சை மாவட்ட தலைவர் வெங்கடேஷ் வரவேற்றார். நிறைவில் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கவிதா ,தஞ்சை மண்டல தலைவர் ப.உதயகுமார் ஆகியோர் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியை
மாநிலச் செயலாளர் அழகு பாண்டி ஒருங்கிணைத்தார்.