மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடை பெற்றது மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம், அமைதி சங்கம், கிரீன் குளோப் துபாய் ஆகியவை சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் தலைமை தாங்கினார்.
அமைதி சங்கத் தலைவர் க.சரவணன் முன்னிலை வகித்தார். கிரீன் குளோப் நிறுவனத் தின் தலைவர் ஜாஸ்மின் மரக்கன்றுகளை வழங்கினார்.
காந்திய சிந்தனை கல்லூரி முதல்வர் தேவதாஸ் மரக்கன்று நட்டார். தொடந்து, மரம் நடுவது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. ஏற்பாடுகளை, தல்லாகுளம் அமைதி சங்கச் செயலாளர் சந்தோஷ் செய்திருந்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிவராமன் நன்றி கூறினார்.