செங்குன்றம் செய்தியாளர்
மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாதவரம் ,பொன்னியம்மன்மேடு ,தணிகாசலம் நகர், நாலாவது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஆனந்தன் (வயது 55 ) இவர் புழல் காவல் நிலையத்தில் உள்ள மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி சரளா இந்த தம்பதியினருக்கு சபரிதா (வயது 24) தீக்ஷிதா ( வயது 19 ) என்ற இரு மகள்களும் உள்ளனர் .
இந்நிலையில், தனது மூத்த மகள் சபரிதாவிற்கு திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில், விருப்பம் இல்லாத காரணத்தினால் அவரது மகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்து ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்தவர் இரண்டு நாள் மருத்துவ விடுப்பில் திரு.வி.க நகரில் உள்ள தனது அம்மாவின் வீட்டிற்கு சென்றுள்ளார் அங்கு நேற்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு அறையில் தூங்க சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வராததால் வீட்டில் உள்ளவர்கள் கதவைத் தட்டி அவரை எழுப்பினர்.
கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அருகில் உள்ளோர் உதவியுடன் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது அங்கு மின்விசிறியில் வேட்டியால் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
இது பற்றிய தகவல் திருவிக நகர் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதின் பேரில் , போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து திரு வி கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த உதவி ஆய்வாளர் ஆனந்தன் புளியந்தோப்பு, வில்லிவாக்கம் ,கொளத்தூர் ராஜமங்கலம் ,மாதவரம் , புழல் , மாதவரம் போக்குவரத்து பிரிவு உட்பட பல காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. உதவி ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.