28 தங்கம் உட்பட 34 பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய ஐந்து வயது சிறுமி உட்பட 19 மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு
கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் தடகள போட்டியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் உட்பட 19 பேர் தங்கம்,வெள்ளி, என 34 பதக்கங்கள் பெற்று அசத்தியுள்ளனர்..
கர்நாடகா மாநிலம் மைசூரில் தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் தடகள போட்டி நடைபெற்றது சப் ஜூனியர் ,ஜூனியர்,மற்றும் சீனியர் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இதில் தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா,அரியானா,மகாராஷ்டிரா,என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாடு அணி சார்பாக கோவையில் இருந்து வருண் மார்ஷியல் அகாடமியை சேர்ந்த ஏழு மாணவிகள் உட்பட 19 பேர் ,கலந்து கொண்டனர்..
ஒற்றை கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு வீச்சு, வாள் வீச்சு, சிலம்பு சண்டை, அலங்கார வரிசை, மான் கொம்பு, வேல் கம்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் சிலம்பம் போட்டி நடைபெற்றது.
இதே போல தடகள போட்டிகளில் ஓட்டப்பந்தய போட்டிகளும் நடைபெற்றன பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களது ஆற்றல் மிகு திறனை வெளிப்படுத்தி 28 தங்கம்,6 வெள்ளி, 34 பதக்கங்கள் பெற்று அசத்தியுள்ளனர்..
இந்நிலையில் பதக்கங்களுடன் கோவை திரும்பிய மாணவ,மாணவிகள் மற்றும் பயிற்சியாளர் வருண் ஆகியோருக்கு கோவை வடவள்ளி பகுதியில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது இதில் கலந்து கொண்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மாலைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..