தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பதவி ஏற்ற நாள் முதல் மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை சரி செய்தார் அதன் பின்பு அடிப்படை வசதிகள் சரி செய்யப்பட்டது இந்த நிலையில் நகரை அழகுப்படுத்தும் வகையில் பல்வேறு வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு கட்டமாக தெப்பக்குளம் சீரமைக்கப்படாமல் உள்ளது
என்று பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர் 1997 ஆம் ஆண்டு அப்போது நகர் மன்ற தலைவராக இருந்த ஹென்றி தெப்பக்குளத்தை சீரமைத்தார் அதன்பின்பு நகர் மன்ற தலைவராக இருந்தவர்களும் மாநகராட்சி மேயராக இருந்தவர்களும் தெப்பக்குளத்தை திரும்பி கூட பார்க்கவில்லை ஆண்டுதோறும் நடைபெறும் தெப்பத் திருவிழா என்று கூட தெப்பக்குளத்தை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எந்த ஒரு மாநகராட்சி மேயருக்கும் மனமில்லை இந்த நிலையில் தெப்பக்குளத்தை எந்த வகையில் நவீன வசதிகளுடன் எப்படி சீரமைக்கலாம் என்று பல கட்டங்களாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்
மேயர் ஜெகன் இதனை அடுத்து திங்கட்கிழமை காலை மாநகராட்சி மேயர் அதிகாரிகளுடன் தெப்பக்குளத்துக்கு நேரில் வருகை தந்தார் அங்கு அதிகாரிகளிடம் எந்த வகையில் எப்படி சீரமைக்கப்படுகிறது என்ற விபரங்களை கேட்டு அறிந்தார் அப்போது எக்காரணத்தைக் கொண்டும் மழை நீர் கழிவு நீர் தெப்பக்குளத்துக்குள் வரக்கூடாது என்று அதிகாரிகளுக்கு கண்டிப்பாக உத்தரவிட்டார்
மேயர் ஜெகன் மேலும் பொதுமக்கள் சிறுவர்கள் இரவு நேரத்தில் பொழுது போக்கும் வகையில் அம்சத்தை உருவாக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் உத்தரவிட்டார் அதன் பின்பு தெப்பக்குளம் பகுதி முழுவதும் சுற்றிப் பார்வையிட்டார் தெப்பக்குளம் பகுதி முழுவதும் கிரானைட் கல் பதிக்கப்படுகிறது பொதுமக்கள் அமர்ந்து கண்டு களிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படுகிறது
இரவை பகலாக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மின் விளக்குகள் பொதுமக்களை கவரும் வகையில் அமைக்கப்பட உள்ளது எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தில் பெரிய மாநகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது
போல தெப்பக்குளத்தில் இயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட உள்ளது இது பொதுமக்கள் பொழுதுபோக்குடன் இயற்கை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது தெப்பத் திருவிழா நடைபெறும் பொழுது நீர்வீழ்ச்சி வெளியே எடுக்கப்பட்டுவிடும் அதன் பின்பு தெப்பக்குளத்தில் விடப்படும் என்று மேயர் ஜெகன் கூறினார்
28 வருடமாக எந்த ஒரு நகர மன்ற தலைவரும் மாநகராட்சி மேயரும் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என்ற எண்ணம் மனம் இல்லாத நிலையில் 50 லட்ச ரூபாய் மதிப்பில் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய தெப்பக்குளம் சீரமைக்கப்படவுள்ளது . தெப்பக்குளத்தில் உள்ள நீர் பச்சை கலராக நிறம் மாறுவதால் வாரத்துக்கு ஒருமுறை மோட்டார் மூலம் தெப்பக்குளத்தில் உள்ள நீரை அப்புறப்படுத்தப்படும் தெப்பக்குளத்தில் நீர் நிறம் மாறுவதால் சில நேரங்களில் மீன்கள் இறந்து விடுகிறது
ஆகையால் மீன்களையும் முழு அளவில் பாதுகாக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் தெரிவித்துள்ளார் தூத்துக்குடி மாநகர மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகவே தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு இரண்டு மாதத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது என்று குறிப்பிடத்தக்கது