திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி மாணவர்கள் பல்வேறு சாதனைகளை புரிந்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கைப்பந்து போட்டியிலும் 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் வாலிபால் போட்டியிலும் முதலிடம் பெற்று வருவாய் மாவட்ட அளவில் நடைபெற உள்ள விளையாட்டு போட்டியில் பங்கு பெற தங்களை தகுதிப்படுத்தி உள்ளனர்
மேலும் கபடி மற்றும் கடற்கரை கையுந்து பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்மேலும் தடகள போட்டிகளான குண்டு எறிதல் நீளம் தாண்டுதல் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் மற்றும் இரண்டு இடங்களை பெற்று ஏழு மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற உள்ள தடகளப் போட்டியில் பங்கு பெற உள்ளனர்
குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் மாணவர் கருப்பையா நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் இரண்டு போட்டிகளில் முதலிடம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர். இளங்கோ குமார் அவரது தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மருத்துவர்.செல்வராஜ் மற்றும் செயலாளர் மருத்துவர்.அழகுராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றனர் சாம்பியன் கோப்பையை வென்ற பள்ளி மாணவர்களுக்கு மருத்துவர்.செல்வராஜ் வெற்றிக் கோப்பையை வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்.
உடன் உடர்கல்வித்துறை இயக்குனர் முனைவர். நெப்போலியன் உடற்கல்வித்துறை ஆசிரியர்கள். கோவிந்தராஜ்,ஜெயந்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.