அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் பல்வேறு சமூக மக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, கடந்த வாரம் அந்த கிராமத்திற்கு வருகை தந்து கட்சியின் பெயர் பலகை திறந்து வைத்தார்
பெயர் பலகை வைக்கப்பட்ட இடம் புறம்போக்கு இடம் எனக்கு கூறி வருவாய் துறை அதிகாரிகள் அந்த இடத்தில் இருந்த பெயர் பலகையை அகற்றினார் நேற்று காலை பெயர் பலகையை அகற்றிய வருவாய் துறையை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில நிர்வாகி சேதுராமன், மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், தலைமையில் பாலமேடு வெள்ளையம்பட்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.