ஊமச்சிகுளம்
மதுரைமாவட்டம் ஊமச்சிகுளத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய அரசியல் அமைப்பை காப்போம் என்ற தலைப்பில் மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆலத்தூர் டி.ரவிச்சந்திரன்,தலைமை தாங்கினார்
நகர் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன், பொதுச் செயலாளர் சி.ஆர்.சுந்தர்ராஜன், அமைப்புசாரா துறை மாநில தலைவர் மகேஸ்வரன், மாநிலத் தலைவர் மகாத்மாசீனிவாசன்,அமைப்புசாராதுரை மாநில தலைவர்மகேஸ்வரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினரும் மாவட்ட பொருளாளருமான நூர்முகமது,மற்றும் முருகன் ஆகியோர் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினர்களாக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் எஸ்.ராஜேஷ்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்,
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில, மாவட்ட, நிர்வாகிகளுக்கு வடக்கு மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன், கைத்தறி ஆடை அணிவித்தார். இந்த கூட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.