நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள ஸ்ரீ பொன்னி மெடிக்கல் சென்டர் தனது மருத்துவ சேவைகளில் ஒரு புதிய முன்னேற்றத்தை அறிமுகப்படுத்தும் வகையில் சர்க்கரை நோயை குணப்படுத்தும் ஹார்மோன்கள் (உட்சுரப்பியல்) பிரிவு தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு பொன்னி மெடிக்கல் சென்டர் தலைமை மருத்துவர் டாக்டர் அரவிந்த் சுப்பிரமணி தலைமை வகித்தார்.டாக்டர்கள் ராமசாமி, சாந்தி வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு கலந்து கொண்ட ஹார்மோன்கள் பிரிவு தலைமை மருத்துவர் டாக்டர் பழனிவேல் புதிய மருத்துவ பிரிவை திறந்து வைத்து பேசியதாவது;-
இம் மருத்துவமனையில் கடந்த ஒரு வருடமாக இலவச சர்க்கரை முகாம் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இதில் நோயாளிகளின் தூக்கம், உணவு பழக்கம் உடற்பயிற்சி ஸ்கிரீன் டைம் போன்ற வாழ்க்கை முறை மாற்றமே சர்க்கரையை கட்டுப்படுத்தும் பிரதான வழி என்பதால் அதிகரித்து வரும் நீரிழிவு மற்றும் ஹார்மோன் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில் ஹார்மோன்கள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
நீரிழிவு, தைராய்டு, ஹார்மோன் சம நிலையின்மை போன்ற பிரச்சினைகளுக்கான சிறப்பு சிகிச்சையும்,நோயாளிகளுக்கான வாழ்க்கை முறையை மாற்ற ஆலோசனைகளும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். விழாவில் வேலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்னி மணி (எ) சுப்பிரமணியம், செளடாம்பிகா கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ராமமூர்த்தி, டாக்டர்கள், மருத்துவமனை செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்