விஜயகாந்தின் 73 வது பிறந்த நாள் விழா-துறையூரில் தேமுதிகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்புறம் துறையூர் நகர தேமுதிக சார்பில் நகர செயலாளர் சங்கர் தலைமையில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் 73 வது பிறந்தநாள் விழா (25/08/2025) இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இதில் துணை செயலாளர் ஆனந்த், பொருளாளர் முத்துகுமார், கேப்டன் விஜயகாந்த் உதவியாளர் சிவக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன்,முன்னாள் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் மகேஸ்வரன்,நகர இளைஞரணி செந்தில்காந்த், அம்மாபட்டி குமார், ராஜ், சத்யராஜ் மற்றும் தொழிற்சங்க பேரவை பாபு மற்றும் நகர தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு கேப்டன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்