துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியம் குன்னுப்பட்டி தேமுதிக கிளை சார்பில் முன்னாள் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் மகேஸ்வரன் தலைமையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த்-ன் 73 வது பிறந்தநாள் இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து துவக்க பள்ளி மற்றும் அங்கன்வாடி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, பென்சில், சிலேட்டு வழங்கப்பட்டது.விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உதவியாளர் சிவக்குமார்,கிளைக் கழக நிர்வாகிகள் எம்ஆர்எப் வினோத்,புஷ்பராஜ், ஐடி வினோத்,உதயகுமார், சதீஷ்,குணால் ,கதிரேசன், விஜயகுமார் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்