திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வலங்கைமான், சந்திரசேகரபுரம் குறுவள மையங்கள் அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
விழாவில் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் என்.எஸ். சுகந்தி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கே. பிரேமா, ஆசிரியர் பயிற்றுநர் எழிலரசி, மாணிக்க மங்கலம் பள்ளியின் தலைமை ஆசிரியை நீலா ஆகியோர் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு துவக்க உரைகளும், மாணவர்களின் சிறந்த கலைப்படைப்புகளும் தொடர்ச்சியாக கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் 20 க்கும் மேற்பட்ட பள்ளிகள், 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.