பெரியகுளம் நகரில் புதியதாக மீன் மார்க்கெட் கட்ட பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டல் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை மார்க்கெட் பின்புறம் மீன் மார்க்கெட் வளாகம் கட்டும் பணிகளுக்கு செய்து பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டு விழாவிற்கு பெரிய குளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் பெரிய குளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் நகராட்சி ஆணையாளர் தமிஹா சுல்தானா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 87 லட்சம் மதிப்பீட்டில் 50 சென்ட் இடத்தில் 22 கடைகள் மற்றும் மீன்களை பதப்படுத்துவதற்கு ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் கடைகள் கட்ட பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் பூமி பூஜைகள் செய்து அடிக்கல் நாட்டினார்.இந்த நிகழ்ச்சியில் பெரிய குளம் நகர திமுக செயலாளர் முகமது இலியாஸ் வழக்கறிஞர் சிவக்குமார் மார்க்கெட் சங்கத் தலைவர் சலீம் ராஜா மற்றும் நகராட்சி நகர் மன்ற கவுன்சிலர்கள் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்