பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
இந்தியாவில் துணை ஜனாதிபதி பதவி என்பது உயர்ந்த மரியாதைக்குரிய பதவியாகும் , அத்தகைய பதவிக்கு ஒரு தமிழரை நியமிப்பதை பெருமை கொள்வோமே தவிர அதை திமுகவும் கூட்டணி கட்சிகளும் தவிர்ப்பதும், தடுப்பதும் தமிழருக்கு தமிழரே பெருமை இல்லை என தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி……..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்தை ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது……
இந்தியாவில் துணை ஜனாதிபதி பதவி என்பது உயர்ந்த மரியாதைக்குரிய பதவியாகும் , அத்தகைய பதவிக்கு ஒரு தமிழரான ராதாகிருஷ்ணனை நியமிப்பதை பெருமை கொள்வோமே தவிர அதை திமுகவும் கூட்டணி கட்சிகளும் தவிர்ப்பதும், தடுப்பதும் தமிழருக்கு தமிழரே பெருமை இல்லை எனவும்,அதிமுக ஆட்சியின் போது டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலாக அறிவிக்கப்பட்டது
அதை உடனடியாக தமிழக அரசு அரசாணை வெளியீட வேண்டும் எனவும்,
பாபநாசம் தாலுக்காவில் உள்ள அம்மாபேட்டை ஒன்றியத்தை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்றும் ,மேலும் பாபநாசத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே குடிகாடு-ராமாநல்லூர் பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டவேண்டும்,
வாழ்க்கை -தூத்தூர் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டும் எனவும் அவர் கூறினார்..
மேலும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தப்படி கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனவும் ,1000-நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருமண்டங்குடி கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்,டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை தேக்கமடையாமல் உடனடியாக இயக்கம் செய்யப்பட வேண்டும்
என அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில,மாவட்ட, ஒன்றிய சார்பில் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.